உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவரும் புனித அந்தோனியார் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் நாள் நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் இவ்வருடம் 5000 தமிழக மீனவர்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழகத்திலிருந்து எவரும் கலந்துகொள்ளப்போவதில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட் கிழமை இரவு இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சதீவுக் கடற்கரைப் பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவேளை சிறீலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பிரட்ஜோ என்ற மீனவன் பலியாகியுள்ளதுடன், இன்னொரு மீனவர் காயமடைந்துள்ளார்.

தம்மீது சிறீலங்கா கடற்படையினரே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளபோதிலும், இதனை சிறீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. இருப்பினும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தையடுத்து சிறீலங்கா அரசாங்கத்துக்கெதிராக எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளதுடன், தமிழ்நாட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனையடுத்தே இம்முறை கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் தமிழ்நாட்டிலிருந்து எவரும் கலந்துகொள்ளப்போவதில்லையென தமிழ்நாட்டு மீனவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்