Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



காலையடி மறுமலர்ச்சி மன்றத்தினரால் சிறப்பாக மேடையேற்றப் பட்ட பல நாடகங்கள் உண்டு.அந்த வரிசையில் வாழ்வின்வழி,,வியர்வைத்துளிகள்,வீரம் விளைந்த்தது,அலையும் நெஞ்சம்,தூங்காத தூண்கள், உறங்கும் உயிர்கள், காதலின்கீதம் காகிதப்புலிகள்,நட்பு,மயானகாண்டம் ,  கோவலன் கண்ணகி,  பண்டாரவன்னியன், சாம்பிராட் அசோகன்,  சோக்கிரட்டீஸ் பூறோக்கர் பொன்னையா இப்படியாக நூற்றுக்கணக்காக நாடகங்களை மேடை ஏற்றினோம் ஆரம்பத்தில் எங்களுக்கெல்லாம் நாடகங்களின் இயக்குனராக பெரும்பங்காற்றியவர்கள் வரிசையில் திரு மகாதேவன்(சிவலிங்கம்), திரு செ.தங்கராசா,திரு சோ.தேவராசா திரு த.தனகோபால் போன்றோரை குறிப்பிடலாம். இதில் மன்றத்தினை வடமாகாணத்தில் பட்டி தொட்டி எல்லாம் அறியவைத்த பெருமை காகிதப்புலிகள் நாடகத்தினையே சேரும். காகிதப்புலிகள் நாடகத்தின் நாடக ஆசிரியர்கள் சோ.தேவராசாவும் அ.சந்திரகாஸனும் ஆவர். இந் நாடகத்தின் மூலம் அகில இலங்கை ரீதியில் சிறந்த நடிகருக்கான சாகித்திய மண்டலப் பரிசு சோ.தேவராசா கிடைத்ததது வடமகாண நாடகப்போட்டியில் சிறந்த நாடகத்திற்க்கான முதலாவது இடத்தினை காகிதப்புலிகள் நாடகம் இடம் பிடித்தது. நாளடைவில் நாடகத்தின் பெயர் மாற்றப்பட்டு மீண்டும் பாரதி என்ற

பெயருடன் பல மேடைகள் ஏறியது.இதில் பாரதியாக திரு ந.இரவீந்திரன் வேடம் ஏற்று நடிப்பார். இந்த நாடகத்தின் சில காட்சிகளை (எனது ஞாபகத்தில் உள்ளவற்றை) உங்கள் முன் கொண்டு வர முயல்கிறேன். பல தவறுகள் ,பிழைகள் இருக்கலாம் மன்னிக்கவும். ஞாபகத்தில் உள்ளவற்றை நண்பர்களின் அன்பு வேண்டுகோளிற்க்கு இணங்கி எழுதுகிறேன் .சில நடிகர்களை தவற விட்டால்மன்னித்துவிடவும்.

காட்சி 1

திரை விலக்கப்படும்.நாடக மேடை இருட்டாக இருக்கும்.நாடக மேடையில் பலதரபட்ட தொழிலாளர் சிலை போல் ஆடாது அசையாமல் தோற்றம் அளிப்பார்கள். எல்லாத்தொழிலாளர் தலையிலும் சிவப்பு நிற மெல்லிய துணி கட்டப்பட்டு இருக்கும். சாக்கினை கிழித்து சாரம் போல உடுத்தி இருப்போம்

மேனி வெறுமையாக இருக்கும்

மேடையின் அருகில் இருந்து பின்னணி வாத்தியங்களின் மத்தியில் (மத்தளம்)

ந. கிருஸ்ணதாஸன் மிகவும் இனிமையான குரலில் தொழிலாளர் அறிமுகப்பாட்டினை சிறந்த ராகத்தோடு வெகுசிறப்பான முறையில் பாட

அரங்கமே அமைதி கொள்ளும், மேடைக்கு ஒளிவரத்தொடங்கும்.

உழைக்கும் கூட்டத்தை பாரடா வாழ்வை உயர்த்தும் கூட்டத்தை பாரடா

உழைக்கும் கூட்டத்தை பாரடா வாழ்வை உயர்த்தும் கூட்டத்தை பாரடாபாரடா

இயந்திரம்தானா சொல்லடா ஆ … இவர் இயந்திரம்தானா சொல்லடா ஆ …

இவர் உழைக்கும் இயந்திரம் தானா சொல்லடா ஆ சொல்லடா ஆ

(எல்லோரும் சிலையாக நிற்க்க அந்த அந்த வேலை செய்பவர்கள் மட்டும் அசைந்து வேலை செய்வார்கள்)

கல்லை உடைத்து கல்லாய் போன மனிதர் வாழ்வை பாரடா

கல்லை உடைத்து கல்லாய் போன மனிதர் வாழ்வை பாரடா பாரடா

( க.தாயாளன் கல்லை உடைத்து மிகவும் கடினப்பட்டு வேலைசெய்வார் )

மண்ணைச் சுமந்து மண்ணானோரின் கனத்தை வாழ்வை பாரடா

மண்ணைச் சுமந்து மண்ணானோரின் கனத்தை வாழ்வை பாரடா பாரடா

( சி.கனகலிங்கம் மண் கடகத்தினை சுமந்து மிகவும் கடினப்பட்டு வேலைசெய்வார் )

மரப்பட்டைகள் உடைத்து மரத்தை அரிந்து பிழைப்பவர் தன்னை பாரடா

மரத்தை அரிந்து மரமாய்ப் போனோர் வாழ்வை பாரடா பாரடா

( மா.சிவசுப்பிரமணியம் பெரிய வாளால் மரத்தினை மிகவும் கடினப்பட்டு அறுத்துக் கொண்டு இருப்பார்)

காட்டை அழித்து களனிகள் ஆக்கும் உழவர் கூட்டத்தினைப் பாரடா

காட்டை அழித்து களனிகள் ஆக்கும் உழவர் கூட்டத்தினைப் பாரடா பாரடா

( ந.சிவராசா வயலில் மிகவும் களைத்தபடி நெல்லினை ஒருபெட்டியில் வைத்து விதைத்தபடி இருப்பார்)

சுத்தியலெடுத்து இரும்பை அடித்து இரும்பாய்ப் போன மனிதர் வாழ்வை பாரடா

சுத்தியலெடுத்து இரும்பை அடித்து இரும்பாய்ப் போன மனிதர் வாழ்வை பாரடா பாரடா

(ஆரம்பத்தில் சோ.தேவராசா இப் பாத்திரம் ஏற்று நடிதார் .பின்பு தி.யோகேஸ்வரன்) (தூக்கமுடியாமல் சுத்தியல் எடுத்து இரும்பை அடித்துக் கொண்டு இருப்பார்.)

சுற்றி நின்று கரவலை இழுக்கும் மீனவர் கூட்டத்தினைப் பாரடா

சுற்றி நின்று கரவலை இழுக்கும் மீனவர் கூட்டத்தினைப் பாரடா

(இரமணீந்திரன்,இரத்தினராசா இன்னும் மூன்று நான்ங்கு பேர் ஞாபகத்தில் இல்லை சுற்றி நின்று களைத்து விழுந்து கரவலை இழுப்போம்)

உழைப்பவர் உழைப்பை உண்டு உறங்கும் காகிதப்புலியை பாரடா

உழைப்பவர் உழைப்பை உண்டு உறங்கும் காகிதப்புலியை பாரடாபாரடா

(முதலாளியாக முதலில் த.தனகோபால்,பின்பு சோ.தேவராசா )

(வெளியில் இருந்து வந்து முதலாளி வேலை எல்லாரும் ஒழுங்காக செய்கிறார்களோ முளித்து முளித்து பார்ப்பார.)

(முதலாளி முளித்து பார்க்க வேலை செய்வோர் பயத்துடன் நடுநடுங்கி வேலை செய்வார்கள்)

பயந்து சாகும் நிலை காணடா இவர்கள் வாடிச்சாவதை பாரடா

பயந்து சாகும் நிலை காணடா இவர்கள் வாடிச்சாவதை பாரடா பாரடா

என்னாலை ஏலாது என்னாலை ஏலாது காலமை கஞ்சி கருப்பெட்டி தேத்தண்ணி கலக்குது வயித்தை கலக்குது வயித்தை

என்னாலை ஏலாது என்னாலை ஏலாது காலமை கஞ்சி கருப்பெட்டி

தேத்தண்ணி கலக்குது வயித்தை கலக்குது வயித்தை

(திரு க.தயாளன் வயித்தினைப் பிடித்துக் கொண்டு அழுது அழுது கொண்டு

கீழே இருக்க )

நான் போட்ட முதல் எல்லாம் நாசமாக நாசமாக போகிறது

நான் போட்ட முதல் எல்லாம் நாசமாக நாசமாக போகிறது

எட எழும்படா எட எழும்படா

(முதலாளி பொல்லாலை தள்ளி,தள்ளிப் பேசுவார்)

(அப்போது தொழிலாளிகளில் ஒருவன் தி. யோகேஸ்வரன் கெஞ்சி முதலாளியிடம் சொல்லுவார்)

பஞ்சம் பட்டினி பாவம் ஐயா

பஞ்சம் பட்டினி பாவம் ஐயா

பசியும் மாறி வந்திடுவான் ஐயா

(முதலாளி )

பஞ்சம் என்றால் எனக்கென்ன

பட்டினி என்றால் எனக்கென்ன

எட எழும்படா எட எழும்படா

(அப்போது தொழிலாளிகளில் ஒருவன் திரு யோகேஸ்வரன் கெஞ்சுவார் முதலாளியிடம்)

ஐயா பத்து பிள்ளை ஐயா அவன் பாவம் என்ன செய்வான்

பஞ்சம் பட்டினி பாவம் ஐயா பசியும் மாறி வந்துவிடுவான் ஐயா

ஐயா பத்து பிள்ளை ஐயா அவன் பாவம் என்ன செய்வான்

பஞ்சம் பட்டினி பாவம் ஐயா பசியும் மாறி வந்துவிடுவான் ஐயா

பஞ்சம் என்றால் எனக்கென்ன பட்டினி என்றால் எனக்கென்ன

(முதலாளி கோவத்தோடு பத்து விரலைக் காட்டி)

பத்துப் பிள்ளை பெற மட்டும் பஞ்சி இவனுக்கு இல்லையோ காணும்

எட எழும்படா எட எழும்படா காசு கரியாகுதடா காசு கரியாகுதடா

எட எழும்படா எட எழும்படா

முதலாளி காலால் உதைவார்)

(இன்னும் சில வரிகள் மறந்து விட்டேன்)

நல்ல பிள்ளை நீ வா நாலுசதம் கூடத்தாறன்

நல்ல பிள்ளை நீ வா நாலுசதம் கூடத்தாறன்

(முதலாளி பக்கம் யோகேஸ்வரன் போக)

உடனேதயாளன் நீ கூழுக்கும் பாடி கஞ்சிக்கும் பாடி

கூத்திடுவதும் முறையோ இப்படியாக போகும் முதல்க் காட்சி

(முதல்க் காட்சியின் இறுதியில் மேடையின் பின்னே ஒரு குரல்)

• கஞ்சி குடிப்பதிற்க்கிலார் அதன் காரணங்கள் எவையுமென்று

அறிவுமிலார் தினம் பஞ்சமோ பஞ்சமென்று பரிதவித்தே

துடி துடித்தே அஞ்சி மடிகின்றாரே இவர்

துயர் துடைக்க வழி இல்லையா?

தொடரும்………..

5 Responses to “காகிதப்புலிகள். நாடகம். பாகம் 1.”

  • Selvarajah K.:

    அம்பாள் துணை,
    காகிதப் புலிகள் நாடகத்தை நேரில் பார்த்த்து போன்ற ஓர் உணர்வு.காதுகளில் பாட்டுக்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.
    கனடாவில் நிகழ்ந்த நிகள்வொன்றில் மன்றத்தின் பாடலைக் கேட்டேன். அன்று இருந்த தொனியும், இறுமாப்பும், கம்பீரமும், உறுதியும் அந்தப் பாடலில் இருக்கவில்லை. எனக்கே வேதனையாக இருந்த்து. இதனோடு ஈடுபாடு கொண்ட அங்கத்தவர்களுக்கு….. .இனிமேல் மன்ற கீதம் பாடும்போது கவனத்தில் கொள்ளவும்.
    நன்றியுடன் பளைய மாணவன் இராசன்.

  • அழ பகீரதன்:

    தங்கள் முயற்சி நன்று தொடர்க. சோ தேவராஜாவுக்கு சிறந்த நடிகருக்கான ஜனாதிபதி விருது கிடைத்தது கொழும்பில் தயாரிக்கப்பட்ட செவ்வானத்தில் ஒரு என்ற நாடகத்தில் நடித்தமைக்கே. அக்காலங்களில் அவர் வானொலி நாடகங்களிலும் நடித்துள்ளார். செவ்வானத்தில் ஒரு என்ற நாடகம் மறுமலர்ச்சி மன்றமும் சங்கானை மக்கள் கலை மன்றமும் சரியான பெயர் ஞாபகமில்லை இணைந்து சங்கானையில் நடாத்திய நாடகவிழாவில் மேடையேற்றப்பட்டது. காகிதப்புலிகள் நாடகத்தில் நடித்தமைக்காக யோகேஸ்வரன் அவர்களுக்கு சிறந்த நாடகத்திற்கான விருது கிடைத்த‍து.குரும்பசிட்டியில் என்று நினைக்கின்றேன்.சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி நூற்றாண்டு விழாவில் சிறப்பு சான்றிதழ் பெற்றது.

  • S.Ratnarajah:

    அன்பின் நண்பன் பாலகுமாருக்கு!
    நீங்கள் குறிப்பிட்டது நல்ல யோசனைதான் .அவர்களும் நாடகப் பிரதி எல்லாவற்றையும் ஊரிலை விட்டு இடம் பெயர்ந்தாலை இப்போ எங்கே நாடகப்பிரதிகள்அவர்களுக்கும் தெரியாது ஒன்றும் செய்யேலாது.
    நண்பன் இளையவனின் கருத்துப் படி எனக்கு நன்றாக தெரியாது வாய்ப்புஇருக்கலாம் பிற்க்காலங்களில் மீண்டும் பாரதி என்றபெயரில் காகிதப்புலிகள் நாடகம்மேடையேறி வருகின்ற காலங்களில் பாரதியாருக்குரிய வசனநடைகளை ந.இரவீந்திரன் எழுதி இருக்கலாம். ந.இரவீந்திரன் தான் எல்லாமேடைகளிலும் பாரதியாகவேடம் தாங்கி ஒவ்வொரு காட்சிக்கும் விளக்கம் சொல்லி நாடகத்தினை வழி நடத்திச் செல்வார்.
    .

  • இளையவன்:

    நன்றி நன்றி நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த விடயம். தொடர்ந்து எழுதுங்கள். நாடக ஆசிரியர் இருவர் மட்டும் அல்ல என்று நான் கேள்விபட்டதுண்டு.பெயர்கள் உருதிபட்டுதமுடியவிலை – தயவு செய்து குறை நினைக்க வேண்டாம்
    அன்புடன் இளையவன்

  • T.BALA:

    அன்று நாடகம் பார்த்தவர்கள் கற்பனைபண்ணியபடி இதை வாசித்தால் காட்ச்சிகள் கண்முன் நடப்பது போல் வந்து போகும்.நல்ல முயற்ச்சி ஏதும் சந்நேகங்களை தேவர் அண்ணர்,சந்திரன்அண்ணர்,ரவிஅண்ணர் போன்றோர் தொடர்பு கொண்டு சந்தேகங்கள் நிவர்த்திசெய்யலாம்.நன்றி றணா பாலா

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்