உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்கடுமையான கடல் அலைகளால் படகில் இருந்து நீரில் விழுந்த அவுஸ்திரேலிய மீனவர் ஒருவர் சுறா அபாயம் உள்ள பகுதியில் 6 மணிநேரம் நீந்தி உயிர் பிழைத்தார்.

இந்த சம்பவம் குறித்து ட்விட் ஹெட்ஸ் பொலிஸ் இன்ஸ்பெக்டர் டாரன் ஸ்டீல் கூறுகையில்,“பெரும் கடல் அலைதாக்கப்பட்டு 25 வயது மீனவர் தண்ணீரில் விழுந்துள்ளார். அவரது படகு யாரும் இன்றி தொடர்ந்து சென்றது. இதனால் அந்த மீனவர் 4.7 மைல் தொலைவுக்கு நீந்தி கரை சேர வேண்டி இருந்தது. கடுமையான அலைகளை எதிர்த்து நீந்த வேண்டி இருந்தது” என்றார்.

இதே தண்ணீர்ப் பகுதியில் சமீப நாட்களில் அபாயகரமான சுறாக்கள் நீந்துவதை மீனவர் கண்டுள்ளனர். கடலில் விழுந்த மீனவரின் காலியான படகு வான்வழி மற்றும் கடல் தேடுதல் நடவடிக்கை மூலம் மீண்டும் கண்டெக்கப்பட்டது.

பெயர் குறிப்பிடப்படாத 25 வயது மீனவரின் படகு நியூசவுத் வேல்சின் வடக்குப் பகுதியில் பிங்கல் கடற்கரையில் தென்பட்டபோது, மீனவர் மாயமானதை நிர்வாகத்தினர் கண்டறிந்தனர். உயிர் பிழைத்த மீனவர் மிக மோசமான நிலையில் இருந்தார்.

அவர் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவர் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து வீட்டிற்கு அனுப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஸ்டீல் கூறினார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்