Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஹர்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், கே.பாலகுமரன் தயாரித்துள்ள படம் ‘முந்தல்’. இதில் அப்பு கிருஷ்ணா என்ற புதுமுகம் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக முக்ஷா நடிக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், அழகு, மகாநதி சங்கர், போண்டாமணி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ரிஷா கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். இந்த படத்தில் இயக்குனராக ஸ்டண்ட் ஜெயந்த் அறிமுகமாகிறார். ஸ்டண்ட் இயக்குனரான இவர். தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்பட 250 படங்களில் ஸ்டண்ட் கலைஞராகவும் ஸ்டண்ட் இயக்குனராகவும் பணியாற்றியவர். புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பான கருவை வைத்து முழுக்க முழுக்க டிராவல் மற்றும் ஆக்‌ஷன் பார்மட்டில் இந்த படம் உருவாகி இருக் கிறது.

“ராமேஸ்வரத்தில் தொடங்கும் படம் கேரளா, குளுமணாலி, அந்தமான், பாங்காக், கம்போடியா, வியட்நாம் என்று பல நாடு களுக்கு பயணிக்கும் படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பல சாகச காட்சிகளை கிராபிக்ஸ் பயன்படுத்தாமல் ஒரிஜினலாகவே பட மாக்கியுள்ளனர். கம்போடியாவில் சோழர்கள் கட்டிய சிவபெருமான் கோவிலில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. அதிரடி சண்டைக் காட்சி ஒன்றும் அங்கு படமாக்கப்பட்டுள்ளது. தணிக்கை குழுவினரின் பாராட்டோடு, யு சான்றிதழும் பெற்றுள்ள ‘முந்தல்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்