உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இலங்கையில் போரின் போது இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பான பொறுப்புக் கூறல் விடயத்தில் மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பது இலங்கைக்கு மிகவும் ஆபத்தானதுடன் இந்தப் பயணம் இறுதியில் சர்வதேச விசாரணையில் வந்து முடியும் என கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில்  இலங்கைக்கு எதிரான முதல் பிரேரணையில் நிராகரிக்கபட்ட அனைத்தையும் இரண்டாம் கட்டத்தில் நிறைவற்றவும் புலிகள் எதிர்பார்க்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்ளவுமே தற்போது பொறுப்புக் கூறல் விடயத்தில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலையிட்டு இந்த நகர்வை  தடுக்க வேண்டும் எனவும்  இல்லாவிட்டால் இந்த பயணம் சர்வதேச விசாரணையில் வந்து முடியும்  எனவும் தெரிவித்துள்ள  அவர் இலங்கைக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனீவா பிரேரணையை நிறைவேற்றுவதற்கான இரண்டு வருட கால அவகாசம் வழங்கியிருப்பதன் மூலம் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் எதிர்த்த, நிராகரித்த விசயங்களை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

நாட்டுக்கு எதிராக கடந்த காலத்தில் சர்வதேச தரப்பு கொண்டுவந்த பிரேரணையை முன்னைய அரசாங்கம் எதிர்த்த  நிலையில் இந்த அரசாங்கம் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க பிரேரணைக்கு மீள் இணக்கம் தெரிவித்து முழுமையாக நிறைவேற்ற அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனை காப்பாற்ற முயற்சி செய்ய நபர்களே இன்று ஜெனிவா பிரேரணையை கொண்டுவந்துள்ளனர் என்றும் இதில் புலிகளை நியாயப்படுத்திய நபர்களும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இறுதி யுத்தத்தில் பிரபாகரனை காப்பாற்ற கடும் முயற்சி எடுத்த நபர்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆகவே தமிழர் தரப்பும் புலம்பெயர் அமைப்புகளும் புலிகளின் பிரதிநிதிகளும் எதை எதிர்பார்த்து செயற்படுகின்றனரோ அதை அடையும் பாதையை அரசாங்கம் தனது இணக்கத்தின் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்