உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய ஊழல் மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேசிய தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து அதற்காக ஆயிரத்து 652 லட்சம் ரூபாவை செலுத்தாமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கு கடந்த வாரமே முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். எனினும், தவிர்க்க முடியாத காரணங்களால் அத்தினத்தில் தன்னால் முன்னிலையாக முடியாது என மஹிந்த தரப்பினரால் ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டதுடன், விசாரணையை இன்றைய தினத்திற்கு மாற்றுமாறும் கோரப்பட்டிருந்தது.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விவகாரம் தொடர்பில் மஹிந்தவிடம் கடந்த வருடமும் பல தடவைகள் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்