Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியிருப்பதாகவும், 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவின் சின்சினாட்டி பகுதியில் கேமியோ கிளப்பில் பலர் இருந்த வேளையில், துப்பாக்கியுடன் வந்த நபர் அங்கிருந்த நபர்களை நோக்கி சரமாரியா துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார் மற்றும் 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.தாக்குதல் நடத்திய நபர் சம்பவத்தை நடத்திவிட்டு அப்பகுதியை விட்டு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். திடீரென நடந்த துப்பாக்கிச் சூட்டால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்