Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அது ஒரு மறுமலர்ச்சிக்காலம். நாட்டில் பல மறுமலர்ச்சியாளர் தோன்றியிருந்தனர். மீண்டும் கல்வி கலை இலக்கியங்களை வளர்க்க தமது பங்களிப்பை செய்திருந்தனர். அந்த வகையிலேயே ஈழநாட்டின் வடபகுதியான யாழ்ப்பாணத்தின் சங்கானைப் பிரதேச சபைக்கு உட்பட்ட பண்டத்தரிப்பு எனும் இடத்தில்  உள்ள காலையடி மறுமலர்ச்சி மன்றம் பல இலக்கியப்பணிகளைச்செய்தது.     

    

மறுமலர்ச்சி மன்றத்தின் தோற்றம்

மறுமலர்ச்சி மன்றத்தின் தோற்றமானது இளைஞர்களின் சிந்தனை முதிர்ச்சியின் விளைவாக எம் சமூகத்தின் சமூக கலை கல்வி கலாச்சார விளையாட்டுக்களின் மறுமலர்ச்சியை அல்லது அபிவிருத்தியை நோக்காக கொண்டு  உருவாக்கப்பட்ட அமைப்பாகும். வெற்றிமட திறந்தவெளியில் விளையாடிய இளஞர்களால் உருவாக்கப்பட்ட காலையடி முருகன் விளையாட்டுக்கழகமும்  தேவகோபாலகிருஸ்ன நாடகமன்றமும் மன்றத்தின் தந்தை அமரர் ஆறுமுகம் கந்தசாமி(கந்தையா)உபாத்தியாரின் வழிநடத்தலில் இணைந்தனர். இவ் இணைப்பானது நமது பிரதேச வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கவேண்டிய விடயமாகும்.    

                                            இவ் இணைப்பு நிகழ்வானது 17.09.1972 இல் கூடிய இரு அமைப்பு இளைஞர்களால் நிகழ்ந்தது.இணைப்புக்கூட்டம் செல்வன் சோ.தேவகுமாரின் தேவாரத்துடன் ஆரம்பமாகியது மன்றத்தின் முதல் தலைவராக செல்வன் சோ.தேவராசா தெரிவு செய்யப்பட்டார் தொடர்ந்து மற்றைய பொறுப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.    

    

உபதலைவர் :- செ.சிதம்பரநாதன்
செயலாளர்   :- அ.சந்திரகாசன்
உபசெயலாளர்:- சு.லோகநாதன்
பொருளாளர் :-க.வேல்முருகன்
உபபொருளாளர்:-க.தயாளன்    

————————————————————————–  

மறுமலர்ச்சி மன்றத்தின் மூத்த அங்கத்தவர்கள் அன்றைய காலங்களில்

  

இந்தப்படத்தில் : சோ தேவராஜா, யோகராசா, பொ பாலசுப்பிரமணியம், வேல்முருகன், கனகலிங்கம், ந கிருஷ்ணதாசன், யோகேஸ்வரன், அமரர் சிவசுப்பிரமணியம், ந இரவீந்திரன், ஜெயராசா, சந்திரஹாசன்  

————————————————————–

கலை இலக்கிய வளர்ச்சியில் காலையடி மறுமலர்ச்சி

 அது ஒரு மறுமலர்ச்சிக்காலம். நாட்டில் பல மறுமலர்ச்சியாளர் தோன்றியிருந்தனர். மீண்டும் கல்வி கலை இலக்கியங்களை வளர்க்க தமது பங்களிப்பை செய்திருந்தனர். அந்த வகையிலேயே ஈழநாட்டின் வடபகுதியான யாழ்ப்பாணத்தின் சங்கானைப் பிரதேச சபைக்கு உட்பட்ட பண்டத்தரிப்பு எனும் இடத்தில்  உள்ள காலையடி மறுமலர்ச்சி மன்றம் பல இலக்கியப்பணிகளைச்செய்தது. அதன் சுருக்கமான கட்டுரையாக இது அமைகின்றது. தற்போது பல்வேறு பட்ட நிலையில் மறுமலர்ச்சி மன்ற உறுப்பினர்கள் வளர்ந்து இருப்பதற்கு அவர்களின் முன்னை நாள் கலை இலக்கியச்செயற்பாடுகளே காரணம் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
             ஆரம்பகாலங்களில் காலையடி மறுமலர்ச்சி மன்றத்தில் பல கலைச்செல்வங்கள் வளர்க்கப்பட்டன.  நாடகக்கலை  பேசும்கலை நடனக்கலை  இசைக்கலை எனப்பல கலைகள் வளர்க்கப்பட்டன. இதனைப்பல்வேறு ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. திருகோணமலை மன்னார்  கொழும்பு போன்ற இடங்களிற்குச் சென்று காலையடி மறுமலர்ச்சிக்குழு நாடகங்கள் பலவற்றை மேடை ஏற்றியது.  அது மட்டுமன்றி யாழ் மாவட்டத்தில் முன்னைய காலங்களில் ஓரிரு உருட்டெழுத்து இதழ் வெளிவந்தன. அதில் காலையடி மறுமலர்ச்சி மன்றத்தால் வெளியிடப்பட்ட காலைக்கதிரும் ஒன்றாகும். இக்காலைக் கதிர் இலக்கியங்கள் பலவற்றைத் தாங்கி இரு கதிராக வெளிவந்தது. முதலாம் காலைக்கதிர் குழுவாக       

  •    எஸ்.கேதுவரன்           
  • அழ.பகீரதன்
  •   எஸ் கருணாகரன்
  •   புவீந்திரன்
  •   பேரம்.விஐயநாதன்
  •   நாகேந்திரன்
  •   பணிப்புலம் சுஐ
  •   கடம்பன்

ஆகியோர் கடமையாற்றினார்கள். இவர்களோடு மறுமலர்ச்சி மன்ற ஏனைய உறுப்பினர்களும் பணிபுரிந்தனர். காலைக் கதிர் எனும் பெயர் காலையடியிலிருந்து வெளியாகுவதால் ஏற்ப்பட்டது. இவ்விதழ் அன்றைய நாட்டின் சூழல்த்தன்மைகளை எடுத்துக்காட்டி நின்றது. கள்ளச்சாரயம்,  பெண்ணே சொல்வேன் கேளாய், அழிந்துத்தியாகம் செய் என்பன சமூகத்தில் மதுப்பாவனையும் அதனால் ஏற்ப்படும் விளைவுகளையும் பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகள் எடுத்துக்காட்டுகின்றது.  இவ்வகைக்கவிதைகள் மறுமலர்ச்சிக் காலத்தில் பிரபல்யம் பெற்றிருந்தது. 
          இரண்டாவது காலைக்கதிர் சற்றுவித்தியாசமாக ‘இது அவளின் பயணம்’ எனும் சிறுகதையை நேசேந்திரா வழங்கியிருந்தார். இரு கதிரிலும் கடம்பன் பக்கம் சிறப்பாக அமைந்திருந்தது.   இவ்வாறாக கலை இலக்கிய உலகில் காலையடி மறுமலர்ச்சி மன்றம் பல சேவைகளைச் செய்தது. ஆனால்  தற்போது கலை இலக்கியச் செயற்பாடுகள் முன் எடுக்கப்படாமை பெரும் மனக்குறையை ஏற்படுத்துகின்றது. எதிர் காலத்தில் இவ்வாறான போக்கு மாறி பாரிய மாற்றத்தைக்கொண்டு வரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை    

 என்ற ஏக்கத்துடன் யெ.நிவர்சன்    

காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் இணையத்தளம்.

http://www.kalaiyadi.com

             
 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்