Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வடகொரியாவால் ஏனைய உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண, சீனாவின் உதவி கிடைக்காதவிடத்து அமெரிக்கா தனித்து தீர்வு காணும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.மேற்குறித்த கருத்தை அவர், நேற்று (புதன்கிழமை) அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டி.சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் அணுவாயுத சோதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும் விரும்புகின்றார் என தெரிவித்த ட்ரம்ப், குறித்த விடயத்திற்கு சீனா உதவிபுரிய விரும்புகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ட்ரம்ப், “வடகொரியா தொடர்பில் சரியான தீர்வொன்றை காணவே சீன ஜனாதிபதி ஸி விரும்புகின்றார். நாம் இருவரும் இவ்விடயம் தொடர்பில் கலந்தாலோசித்தோம்” என தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ட்ரம்ப், “வர்த்தகம் மற்றும் பல விடயங்கள் தொடர்பில் ஸி யுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். வடகொரியா விடயத்தில் எமக்கு உதவி கிடைக்குமேயானால் அது அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் சிறந்த வர்த்தக உறவுகளை பேணுவதற்கு சமம். அவ்வாறு இல்லையெனில் இவ்விடயத்தில் அமெரிக்கா தனித்து தீர்வு காணும். இதற்கு ஏனைய நாடுகளின் உதவியை அமெரிக்கா பெற்றுக்கொள்ளும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்