தமிழில் எழுத
பிரிவுகள்


சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த அலெப்போ உள்ளிட்ட பல நகரங்களை சிரியா ராணுவம் படிப்படியாக மீட்டது. அதன் அருகேயுள்ள ரஷிதின், மேற்கு அலெப்போ உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்ற கடந்த 2 ஆண்டுகளாக ராணுவம் முற்றுகையிட்டுள்ளது.
தற்போது அங்கு போரை தீவிரப்படுத்தியுள்ள ராணுவம், போராட்டக்காரர்கள் வசம் இருக்கும் பகுதிகளை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கி வருகிறது. எனவே, அங்கு தங்கியிருக்கும் 70 ஆயிரம் மக்கள் பஸ்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பஸ்களைக் குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வேனை ஓட்டி வந்த தீவிரவாதி, பஸ்களின் அருகே வந்ததும் வெடிக்கச்செய்துள்ளான்.

இதில், வெளியேறுவதற்காக காத்திருந்த பொதுமக்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இவர்களில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்