உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சுன்னாகத்தில் தனியார் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் வீட்டில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் உடுவில் பகுதியில் நேற்று இரவு நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே இந்த பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதன்போது பெற்றோல் குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளது.இந்த சம்பவத்தில் வைத்தியரின் தந்தை வயிற்றுப் பகுதியில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தாக்குதல் சம்பவம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் வைத்தியர் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைத்தியர் மருதனார்மடம் பகுதியில் தனியார் வைத்தியசாலை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.இந்த தாக்குதலை நடத்தியவர்கள் குறித்த எந்த தகவலும் தெரியவராத நிலையில், சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்