உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அலெக்ஸ் கிரியே‌ஷன்ஸ் சார்பில் அர்வி தயாரிக்கும் படம் ‘ராஜாவும் 5 கூஜாவும்’. இதில், அர்வி கதாநாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, பவர்ஸ்டார் சீனிவாசன், ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், பாலாஜி, ரவிமரியா உள்பட பலர் நடிக்கிறார்கள்.ஒளிப்பதிவு-கார்த்திக்ராஜா, இசை- ரவி விஜய் ஆனந்த், படத்தொகுப்பு-சுரேஷ் அர்ஸ், கலை-சாய்மணி, நடனம்- அட்சய் ஆனந்த். தயாரிப்பு- அர்வி. கதை,திரைக்கதை, வசனம், இயக்கம்-பிரபு ஆதித்யன்.வித்தியாசமான நகைச் சுவை படமாக ‘ராஜாவும் 5 கூஜாவும்’ தயாராகி வருகிறது. இந்த படத்துக்காக 50 வருடங்களுக்கு முன்பு பிரபலமான ‘உன் அழகை கன்னியர்கள் கண்டதினாலே….’ என்ற பாடலை நவீன தொழில் நுட்ப உதவியுடன் இசை அமைப்பாளர் ரவி விஜய் ஆனந்த் ‘ரீமிக்ஸ்’ செய்துள்ளார். கானாபாலா பாடி இருக்கிறார்.

இந்த பாடலுக்கான நடன காட்சி ஜெய்ப்பூர்அரண்மனையில் படமாக்கப்பட்டது. இதில் நாயகன் அர்வி, இமான் அண்ணாச்சி, பவர்ஸ்டார் சீனிவாசன், பாலாஜி, ரவிமரியா ஆகியோர் ராஜாக்கள் உடையில் நடனம் ஆடினார்கள். இவர்களுடன் ரஷ்ய பாலே நடன அழகி, 40 நடன கலைஞர்கள் இணைந்து ஆடினார்கள். நடன இயக்குனர் அட்சய் ஆனந்த் அமைத்த இந்த நடனத்தை கார்த்திக் ராஜா படமாக்கினார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்