உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதவி விலக வேண்டும் என்பதை வலியறுத்தும் வகையில் மத்திய மொஸ்கோவில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மொஸ்கோவின் பல பாகங்களில் நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டங்களில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டங்கள் ஓபன் ரஷ்யா (Open Russia) இயக்கத்தாலேயே முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்களின் போது கலவரங்கள் ஏற்படும் பட்சத்தில் அதனை கட்டுக்கு கொண்டுவரும் பொருட்டு சுமார் 30 பேரூந்துகளில் பொலிஸார் வந்திறங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மொஸ்கோவில் நடத்தப்பட்டது போன்று செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் போதும், குறித்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அரசியல் வரலாற்றில் சுமார் 17 வருடங்களாக நிலைத்து நிற்கும் புடின், எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படவுள்ள தேர்தலில் போட்டியிடுவாரா என்பது தொடர்பில் எவ்வித கருத்துக்களும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

எனினும், 17 வருடகால அரசியல் வாழ்க்கையில் மிகப் பிரபல்யம் அடைந்துள்ள 64 வயது நிரம்பிய ரஷ்ய ஜனாதிபதி, 2018ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்