உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கடந்த 09.04.2017 அன்று அம்பாள் ஆலயத்திற்கு இந்தியாவிலிருந்து வருகை தந்த கலாநிதி.சஞ்சீவிராஜா சுவாமி அவர்கள் அம்பாள் ஆலயம் பற்றி கூறிய கருத்துகளை ஊர் மக்களனைவரும் அறிந்துகொள்வதற்காக இங்கு எழுதுகிறேன். எனது இலங்கை,இந்திய பயணத்தின்போது நேரமின்மை,இணைய வசதியின்மை காரணமாக உடனடியாக எழுத முடியாமைக்கு முதற்கண் அனைவரிடமும் மன்னிப்பு கோரி தொடர்கிறேன்.

பறாளாய் முருகன் ஆலய கும்பாபிஷேகத்திற்காக இந்தியாவிலிருந்து வருகை தந்த சாமிஜி அவர்கள் எனது 

வேண்டுகோளை ஏற்று அம்பாள் ஆலயத்திலுள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து ஆலோசனை வழங்குவதற்காக வந்திருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும்.

சாமிஜி அவர்களால் கண்டறியப்பட்ட குறைபாடுகள்!

1. ஆலயக் கொடிமரம் துணியினால் முற்றிலும் மூடிக் கட்டப்பட்டிருப்பதுடன்,கொடிமரக் கூரையும் நான்கு பக்கமும் பலகையால் மூடி அடைக்கப்பட்டிருப்பது மாபெரும் தவறாகும்.கொடிமரமானது ஆலயத்தின் மூக்கு போன்றதாகும். எனவே உடனடியாக கொடிமரமும்,கூரையும் திறந்து விடப்படவேண்டும்.

2. ஆதி மூலவர் விக்கிரகம் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு மூலவருக்கு அபிஷேகம், பூசைகள் செய்யப்படும்போது ஆதிமூலவருக்கும் செய்யப்படுதல் வேண்டும்.

3.  ஆலயத்தில் துர்க்கை  லிங்கோற்பவர் முதலிய பரிகார மூர்த்திகள் இல்லாமையும் குறைபாடாகும்.

4.  வசந்த மண்டப அமைப்பில் பெரிதாக குறைபாடு எதுவம் இல்லையென்று கூறினார்.

மேற்படி குறைபாடுகள் ஊர்மக்களுக்கு பல்வேறு வகையிலும் துன்ப,துயரங்களை கொடுக்கும் என்பதையும் விளக்கமாக கூறினார். மேலும் ஆலயம் எப்படி அமைக்கப்பட வேண்டுமென  படம் வரைந்து தருவதாகவும் கூறினார்.

நன்றி!

சி.சிவானந்தம்.

7 Responses to “இந்தியாவிலிருந்து வருகை தந்த கலாநிதி.சஞ்சீவிராஜா சுவாமி அவர்கள் அம்பாள் ஆலயம் பற்றி கூறிய கருத்துகள்”

 • சி.சிவானந்தம்:

  முதலில் கனகன் என்று வந்தீர்கள். தற்போது கனடா வடிவேலன் என்று வந்து விசித்திரமாக பதில் எழுதியுள்ளீர்கள்.ஏனெனில், வடிவேலன் கனடாவுக்கு பதில் எழுதி பதிவிட்டபோது எனது கணனி “நீ ஏற்கனவே பதில் எழுதிவிட்டாயென்று பதிவினை ஏற்க மறுத்துவிட்டது.எனவே தனிய பதிவிடுகிறேன்.

  அதாவது,எப்படி பூசகர்களல்லாதவர்கள் ஆதி மூலவரை மீண்டும் மூலஸ்தானத்தில் வைத்து பூசை செய்வது?,தனியார் ஆலயத்தின் கொடிமரத்தில் அல்லது ஏனைய திருப்பணிகளில் உரிமையாளர்களின் அநுமதியின்றி மற்றவர்கள் (பொதுமக்கள்) எப்படி மாற்றங்கள் செய்ய முடியுமென்று கூறுவீர்களா?

  எனது அண்மைய இலங்கைப் பயணத்தில் நாட்டிலுள்ள பல ஆலயங்களுக்கும் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் பல ஆலய பூசகர்கள், தர்ம கர்த்தாக்கள், ஆலய தலைவர்கள் கதைத்தபோது எமது ஊர் மக்கள்,குறிப்பாக ஆலயங்களுக்கு சாத்துப்படி வேலைகளுக்கு செல்லும் இளைஞர்கள்,ஆலய தர்மகர்த்தாக்கள் பற்றி கூறிய விடயங்கள் என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.இதற்கான காரணம் எனது ஊர் * பணிப்புலம்* என்று கூறி என்னை நான் அறிமுகம் செய்வதாகும்.எனதூர் *பண்டத்தரிப்பு* என்று நான் யாரிடமும் கூறுவதில்லை
  எல்லாவற்றுக்கும் மேலாக 18.04.2017 அன்று வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் நான் சந்தித்த எமதூரைப் பூர்வீகமாகக்கொண்ட ஆனால் சிறு வயதிலேயே புலம்பெயர்ந்து வேறு மாவட்டத்தில் வாழ்கின்ற முதியவர் ஒருவர் அம்பாள் ஆலயம்,புளியங்கூடல் ஆலயம் பற்றிய வரலாறுகள், மற்றும் எமதூர் மக்கள்,அம்பாள் ஆலய தர்மகர்த்தாக்கள் பற்றி கூறிய விடயங்கள் என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டது. அப்பெரியவர் 50வது வருடமாக நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயத்திலிருந்து புறப்பட்டு பாதயாத்திரையாக கதிர்காமம் செல்லும் வழியில் தெய்வாதீனமாக வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் என்னை சந்தித்தது மட்டுமன்றி எனனுடன் ஆட்டோவில் நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயம் வரை வந்து வழிபட்டபின் மீண்டும் வல்லிபுர ஆழ்வார் ஆலயம் வரை என்கூடவே வந்து தான் அங்கு மாலைப் பூசை பார்த்துவிட்டு,இரவு அங்கேயே தங்கிச் செல்லப்போவதாகவும்,நாகதம்பிரான் ஆலயத்துக்கு செல்ல வேண்டுமென்ற தனது பல்லாண்டு கால ஆசை எனது உதவியால் நிறைவேறியதென்று நன்றி கூறிவிட்டுச் சென்றுவிட்டார். உண்மையில் அவர் எப்படி எனக்கு அறிமுகமானார், எதற்காக என்னிடம் இவ்வளவு விடயங்களைக் கூறினார்? இந்த தள்ளாத வயதிலும் பாதயாத்திரையாக கதிர்காமம் செல்கிறாரே? எமதூரவர் என்று இவ்வளவு விடயங்களைக் கூறினாரே! யார் இவர்? இதுவும் தாயின் திருவிளையாடல்தானா? என்று என் மனம் ஏங்கிய வண்ணமே இருக்கிறது. எனவே, தயவு செய்து அம்பாள் ஆலயத்தை யாரும் கேலி செய்யாதீர்கள்.மிகுந்த பய பக்தியுடன் தாயை வழிபடுங்கள். எமதூர் எதிர்காலச் சந்ததிகளுக்காகவாவது நிம்மதியான வாழ்வுதனை கொடுக்கும்படி வேண்டி வழிபடுங்கள். தயவுசெய்து மாற்று பெயர்களில் வந்து கேலியான கருத்துகளை எழுதாதீர்கள்.

  ஓம் சக்தி தாயே! எங்கள் தாயே!
  உந்தன் துணையன்றி நாமில்லைத் தாயே!
  எங்கள் குறை நாமறியோம் தாயே!
  எல்லாம் நீயே அறிவாய் அம்மா!
  எம்மையெல்லாம் காத்திடம்மா!
  ஓம் சக்தி ஓம்!

  நன்றி!

 • kanaga:

  வணக்கம் சிவானந்தம்,
  இவற்றை நிறைவேற்ற பணம் தேவையே.
  அந்த பணம் யார் கொடுப்பார்கள். பொதுமக்கள் கொடுப்பதாயின் ஆலயம் பொதுமக்களால் தெரிவு செய்யப் பெற்ற “பரிபாலன சபை” மூலம் இயங்க வேண்டும் என்கிறார்கள். ஆலய கர்த்தாக்கள் செலவு செய்து நிறைவேற்றுவார்கள் என்பது முயல் கொம்பு. ஆனபடியால் முதல் படியை உருவாக்கி மிகுதியை நிறைவேற்றலாம்.

  • சி.சிவானந்தம்:

   முதற்கண் கொடிமரக் கூரையைத் திறப்பதற்கும், ஆதிமூலவரை மூலஸ்தானத்தில் வைத்து அபிஷேகம், பூசை செய்வதற்கும் பணம் எதுவும் தேவைப்படாது என நினைக்கின்றேன்.

  • vadivelan canada:

   இவ் வேலையை யார் விரும்பினாலும் செய்யலாம் .அதற்க்கு எவ்வித தடையும் பூசகர்களால் ஏற்படாது என நினைக்கின்றேன் .

 • kunathilagam:

  இந்தச் செய்தியை யாரும் அல்டசியம் செய்யக் கூடாதென்பது என் கருத்தாக உள்ளது .இவ் ஆலையம் முற் காலத்தில் மிகவும் பய பக்தியுடன் வழிபட்டு வந்தது நாம் அனைவரும் அறிந்ததே .பின்னர் ஆலையம் புனரமைப்புச் செய்ததன் பின் பல பிரச்சனைகள் எழுந்து ஆலையம் அலங்கோலப் பட்டதும் யாவரும் அறிவர் .காரணமில்லாமல் காரியங்கள் நடப்பதில்லை .இங்கும் எதோ காரணம் இருந்திருக்கலாம் .அது எமக்குத் தெரியாத தாயின் செயலாக இருக்கலாம் .இறைவன் நேரடியாக வந்து ஆன்மாக்களை ஆட்க்கொள்வதில்லை எனவும் குருவடிவிலும் வேறு பொருத்தமான வடிவிலும் ஆன்மாக்களை ஆட்க்கொண்டதை புராணங்கள் மூலம் அறிகிறோம் .இங்கு அம்பாள் இந்திய சாமியார் மூலம் இதன் காரணத்தை விளக்கி இருக்கலாம் .எனவே ஆலைய ஆதீன கர்த்தாக்கள் இவ் விடயத்தைக் கொஞசம் கரிசனையுடன் நோக்கிச் செயல்படுவது எமது கிராமத்துக்கு நன்மையாக இருக்கும் .இது என் கருத்து .தவறிருந்தால் மன்னிக்கவும் .

 • S.Sivanantham:

  சாமிஜி அவர்களால் கண்டறியப்பட்ட குறைபாடுகள்!

  1. ஆலயக் கொடிமரம் துணியினால் முற்றிலும் மூடிக் கட்டப்பட்டிருப்பதுடன்,கொடிமரக் கூரையும் நான்கு பக்கமும் பலகையால் மூடி அடைக்கப்பட்டிருப்பது மாபெரும் தவறாகும்.கொடிமரமானது ஆலயத்தின் மூக்கு போன்றதாகும். மூலவரின் மூச்சுக் காற்றானது கொடிமரத்தினூடாகவே வெளியேறி ஊரெல்லாம் பரவும்.எனவே உடனடியாக கொடிமரமும்,கூரையும் திறந்து விடப்படவேண்டும்.

  2. ஆதி மூலவர் விக்கிரகம் உற்சவ மூர்த்தியுடன் வைக்கப்பட்டிருப்பது மிகமிகத் தவறாகும்.எனவே ஆதி மூலவர் மீண்டும் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு மூலவருக்கு அபிஷேகம், பூசைகள் செய்யப்படும்போது ஆதிமூலவருக்கும் அபிஷேகம், பூசை செய்யப்படுதல் வேண்டும்.

  3. ஆலயத்தில் துர்க்கை லிங்கோற்பவர் முதலிய பரிகார மூர்த்திகள் இல்லாமையும் குறைபாடாகும்.

  4. வசந்த மண்டப அமைப்பில் பெரிதாக குறைபாடு எதுவம் இல்லையென்று கூறினார்.

  மேற்படி குறைபாடுகள் ஊர்மக்களுக்கு மரண அவலம்,நோய்கள், பகைமைகள்,குடும்பங்களில் ஒற்றுமையின்மை,பிரிவுகள் என பல்வேறு வகையிலும் துன்ப,துயரங்களை கொடுக்கும் என்பதையும் விளக்கமாக கூறினார்.
  மேலும் ஆலயம் எப்படி இருக்க வேண்டுமென படம் வரைந்து தருவதாகவும் கூறினார்.

  கடந்த பன்னிரண்டு தினங்களுக்குள் இரண்டு இளம் உறவுகளை ஊர் மக்கள் நாம் இழந்து இருப்பதை ஆலய தர்மகர்த்தாக்கள் கவனத்திற்கொண்டு சாமிஜி கூறிய விடயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த முனு வரவேண்டும்.

  மக்களும் தங்கள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை இங்கு வழங்குவதும் வரவேற்கத்தக்கது.

  ஓம் சக்தி ஓம்!

  • kanaga:

   வணக்கம் சிவானந்தம்,
   இவற்றை நிறைவேற்ற பணம் தேவையே.
   அந்த பணம் யார் கொடுப்பார்கள். பொதுமக்கள் கொடுப்பதாயின் ஆலயம் பொதுமக்களால் தெரிவு செய்யப் பெற்ற “பரிபாலன சபை” மூலம் இயங்க வேண்டும் என்கிறார்கள். ஆலய கர்த்தாக்கள் செலவு செய்து நிறைவேற்றுவார்கள் என்பது முயல் கொம்பு. ஆனபடியால் முதல் படியை உருவாக்கி மிகுதியை நிறைவேற்றலாம்.

Leave a Reply for S.Sivanantham

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்