உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அமெரிக்க அதிபராக டொனல்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு ஆஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல் முதல் முறையாக வரும் மே 4 நியூயார்க்கில்  கோரல் கடல் போரின் 75வது ஆண்டு நினைவையொட்டி நடைபெறவிருக்கும் நிகழ்வில் சந்திக்க இருக்கின்றனர்.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனல்ட் டிரம்ப் இரு நாட்டுக்கு இடையேயான அகதிகளை குடியமர்த்தும் ஒப்பந்தம் தொடர்பாக தொலைப்பேசியில் பேசிய பொழுது ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லிடம் கடுமையாக பேசியதாக செய்திகள் வெளியாகின. அத்துடன் அந்த ஒப்பந்தத்தினை முட்டாள்தனமானது என்றும் விமர்சித்திருந்தார். இதனால் இரு நாட்டு உறவிலும் முறுகலான நிலை இருந்து வந்தது.
அதே சமயம், ஆஸ்திரேலியாவுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்   ஒப்பந்தம் மதிக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் போற்றப்படுவதற்கான அவசியமில்லை என குறிப்பிட்டிருந்தார்.
இத்துடன் வட கொரியாவுடன் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் தொடர்பாகவும் இரு நாட்டு அதிகார மட்டத்தில் விவாதிக்கப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்