உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் இமானுவேல் மக்ரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முன்னதாக இமானுவேல் மக்ரான் மற்றும் அவரை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லீ பென் ஆகியோருக்கு ஆதரவும், எதிர்ப்பையும் டொனால்டு டிரம்ப் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள மக்ரானுக்கு டொனால்டு டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் மக்ரானுடன் பணியாற்றுவதை மிக ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் டொனால்டு டிரம்ப் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்ரான் மற்றும் பிரான்ஸ் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அறிக்கை ஒன்றையும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபருடன் பணியாற்றுவதை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். பிரான்ஸ் அரசுக்கு ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்குவோம் என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சீன் ஸ்பைசர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்