உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர் எனக் கூறப்பட்ட சந்திராசாமி காலமானார்.நீண்ட காலமாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த சந்திராசாமி டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தன்னுடைய 69வது வயதில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார்.

கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஸ்ரீபெரும்புத்தூரிற்கு சென்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பில் நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட எழுவர், ஆயுள்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணையை முன்னெடுத்த ஜெயின் ஆணையகம், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சந்திராசாமிடம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்