உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரஸ்சல்ஸில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்டுள்ளது.  நேட்டோ உச்சிமாநாடு நேற்று ஆரம்பமான நிலையில் அதில் கலந்துகொள்ளும் பொருட்டு ட்ரம்ப் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் தொழில் புரிவோர் என பலதரப்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

ட்ரம்பினால் முஸ்லிம்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை மற்றும் மெக்ஸிக்கோ எல்லையில் எழுப்பப்படவுள்ள சுவர் என்பவை தொடர்பில் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

நேட்டோ உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ள நேட்டோ உச்சிமாநாடு இன்று நிறைவடைந்த பின்னர், ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு ஜனாதிபதி ட்ரம்ப் இத்தாலிக்கு விஜயம் மெற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்