உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு – கல்குடா எதனோல் உற்பத்திச்சாலை விவகாரம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் மீது குறித்த உற்பத்திச்சாலையின் ஊழியர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதனையடுத்து, குறித்த ஊழியர்களை கைது செய்த பொலிஸார் அவர்களை நேற்று (செவ்வாய்க்கிழமை) வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஷ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த எதனோல் உற்பத்திச்சாலை தொடர்பில் செய்தி சேகரிப்பிற்காக, மட்டக்களப்பு மற்றும் சித்தாண்டியைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி அங்கு சென்றுள்ளனர்.

இதன்போது, அங்கு பணியின் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் சிலரால் குறித்த ஊடகவியலாளர்கள் இருவரும் தாக்கப்பட்டு படுகாயமடைந்திருந்தனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இது குறித்து ஊழியர்கள் சிலரை கைது செய்திருந்தனர்.

குறித எதனோல் உற்பத்திச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களும் அரசியல்வாதிகளும் பொது அமைப்புக்களும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்