உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மண்ணில் 23-01-1940               விண்ணில் 02-06-2017

யாழ் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், மாளிகாவத்தை கொழும்பில் வசித்தவரும், ஸ்காபுரோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்வராஜா அவர்கள் 02-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்த்தார்.அன்னார் காலஞ் சென்றவர்களான ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், லோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
ரமேசன், ரதீசன், ரதீஜா, ரசீலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கேதீஸ்வரன், கெளரி தேவி, மதுரிக்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும். யுவராம், ஆருஷன், பூமிக்கா, பிரணவி, ஆர்த்திக்கா, வைஷ்ணன், கீர்த்னி அவர்களின் அன்பு பேரனாரும்மாவார்.
மகேஸ்வரி, வரதராஜா, தங்கராஜா(சுவீடன்), நாகராஜா(டென்மார்க்), யோகராஜா(டென்மார்க்), சிங்கராஜா, மோகனாராஜா அவர்களின் பாசமிகு சகோதரரும், கனகரத்தினம், பரமேஸ்வரி, சந்திராதேவி(சுவீடன்). செல்வமலர்(டென்மார்க்), மலர் (டென்மார்க்), சிவசாந்தி, ரமணி அவர்களின் அன்பு மைத்துணரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-06-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி தொடக்கம் 9 மணி வரை 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 என்னும் முகவரியில் உள்ள Chapel Ridge Funeral Home இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மறுநாள் திங்கட்கிழமை அதே இடத்தில் காலை 8 மணி தொடக்கம் 11 வரை ஈமைக்கிரிகைகள் இடம் பெற்று அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
லோகாம்பிகை (மனனவி) +1 416 298 7171
ரமேசன் (மகன்) +1 647 570 9198
ரதீசன் (மகன்) +1 647 297 1395
ரதீஜா (மகள்) +1 647 740 5374
ரசீலன் (மகன்) +1 416 509 4397

3 Responses to “மரண அறிவித்தல்”

 • Loganathan.Appulingam:

  அன்புள்ள செல்வராசா அண்ணா! உங்கள் பிரிவுச் செய்தியறிந்து நாம் எல்லாம் துயரமடைந்து துயரத்தில் இருந்து மீளாமல் தவிக்கிறோம். உங்கள் வாழ்வு வாள்பவர்களுக்கு ஒரு முன் உதாரணம். உங்கள் கல்வி,நேர்மை, சுரண்டாமை உழைத்து உண் என்ற கோட்பாடு உன் பணத்தில் நீ வாழ் சுரண்டி வாழ பழகாதே என்ற உங்கள் கோட்பாடுகளுக்கு கீழ்ப்படிந்து உங்கள் வாழ்வை முடித்துகொண்டீர்கள். உத்தம புருஷனாக வாழ்ந்து இறைவனடி சேர்ந்த உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.கண்ணீருடன். ,
  லோகநாதன்.அப்புலிங்கம்

  Read more

 • kunathilagam:

  அண்ணன் செல்வராசா அவர்களின் பிரிவால்த் துயருறும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .

  தம்பித்துரை குணத்திலகம் .

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:

  யாழ் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், மாளிகாவத்தை கொழும்பில் வசித்தவரும், ஸ்காபுரோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்வராஜா அவர்கள் 02-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்த்தார் என்ற சேதி
  அறிந்து மிகவும் துயருற்றோம்.
  அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு
  எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,
  அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன்
  அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
  ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
  பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்