உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் ஆர்லாண்டோ நகரின் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது, ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் ஊழியர்களை நோக்கி சுடத் தொடங்கினார். இதில் பலர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சுருண்டு விழுந்தனர்.
இந்த தாக்குதல் காரணமாக அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தொழிலாளர்கள் உயிருக்குப் பயந்து ஓட்டம்பிடித்தனர். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலையில் அதிருப்தி அடைந்த ஊழியர் ஒருவர், இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், அவரும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு போலீசாரும், எப்.பி.ஐ. அதிகாரிகளும் விரைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே பகுதியில் உள்ள இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 49 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலின் முதலாமாண்டு நினைவு தினம் இன்னும் ஒரு வாரத்தில் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், இன்று மற்றொரு துப்பாக்கி சூடு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்