Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அறிக்கை, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் சற்றுமுன் மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் (புதன்கிழமை) நடைபெற்றுவரும் வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வில் குறித்த அறிக்கையை முதலமைச்சர் சமர்ப்பித்து உரையாற்றியதோடு, அதன் பிரதியை அவைத்தலைவருக்கு கையளித்தார்.

அத்தோடு, அறிக்கை தொடர்பான விவாதத்தை எதிர்வரும் 9ஆம் திகதி நடத்துவதற்கு அனுமதிக்குமாறும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில், முதலமைச்சர் விக்னேஸ்வரனால் கடந்த வருடம் ஸ்தாபிக்கப்பட்ட விசாரணைக்கு குழுவின் அறிக்கை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த விசாரணை அறிக்கையின் பிரகாரம், மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராசா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியுள்ள நிலையில், இவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என மாகாண சபைக்கு விசாரணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், இதற்கு மாகாண சபையின் கருத்துக்களை கோருவதோடு, சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களினதும் விளக்கத்தை கோரும் வகையில் இன்றைய தினம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்