Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பிரான்ஸில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்று வக்குப்பதிவுகளுக்கு அமைய ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் எல்.ஆர்.இ.எம். கட்சி முன்னிலை பெற்றுள்ளது.பிரான்ஸில் கடந்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் அதில் இமானுவேல் மக்ரோன் வெற்றி பெற்று, ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

இந்த நிலையில் 577 இடங்களைக் கொண்ட அந்த நாட்டின் நாடாளுமன்றத்திற்கான தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றன.இதற்கமைய இதுவரை வெளியாகிய தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் எல்.ஆர்.இ.எம். கட்சி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளில் உள்ள 11 பிரெஞ்ச் தொகுதிகளில் 10 தொகுதிகளில் மக்ரோனின் கட்சி வெற்றிபெற்றுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மக்ரோன் ஏற்கனவே அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற வேண்டுமானால் நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சி தனிப்பெரும்பான்மை பெற வேண்டும் என்பதும் கவனிக்கதக்கது.

இந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறும் வேட்பாளர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படுவர்.இதற்கமைய நேற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப் பதிவுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், சுமார் 50 ஆயிரம் பொலிஸார் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்