உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்
தேவையான பொருள்கள்:

இஞ்சி – கால் கிலோ,

பூண்டுப்பல் – 20,

காய்ந்த மிளகாய் (வறுத்து அரைக்க) – 15

புளி – எலுமிச்சம்பழம் அளவு,

பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்,

வெந்தயத்தூள் – ஒரு டீஸ்பூன்,

கடுகு – கால்டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் (தாளிக்க) – 2,

கறிவேப்பிலை. நல்லெண்ணெய் – கால்கப்,

உப்பு – தேவையான அளவு. செய்முறை: இஞ்சியை சுத்தம் செய்து நறுக்கவும். சட்டியில் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாயை நன்றக வறுக்கவும். அதனுடன் புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும். இத்துடன் பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், சேர்க்கவும். எண்ணெய் மிதந்து வரும்வரை அடுப்பை ‘குறைத்து வைத்து நன்றக வதக்கவும். ஆறியவுடன், எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்