உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாக கொண்டவரும், “ஐய்யனார்” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்றவரும், சம்பில்துறை சம்புநாதீஸ்வரர் ஆலய ஸ்தாபகருமான திரு தம்பிப்பிள்ளை வெற்றிவேல் (நரசிம்ம சுவாமிகள்) அவர்கள்  (20.06.2017)அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னாரின் இறுதிக் இறுதிக் கிரியைகள் இன்று 21.06.2017 சம்பில்துறை சம்புநாதீஸ்வரர் ஆலய வளாகத்தில் நடைபெற்று அங்கு சமாதி இருத்தப் பெற்றது, இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்..

2 Responses to “”

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:

  காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாக கொண்டவரும், “ஐய்யனார்” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்றவரும், சம்பில்துறை சம்புநாதீஸ்வரர் ஆலய ஸ்தாபகருமான திரு தம்பிப்பிள்ளை வெற்றிவேல் (நரசிம்ம சுவாமிகள்) அவர்கள் (20.06.2017)அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற சேதி அறிந்து மிகவும் துயருற்றோம்.அவரின் இழப்பு எமது ஊருக்கு பேரிழப்பு .அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
  ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
  பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.

 • சி.சிவானந்தம்:

  இன்றைய மனிதர் வாழ்வில் சிறு கஷ்டம்,கவலை வந்தவுடன் தத்தம் இறைபக்தியை தூக்கி வீசிவிட்டு,சமயாசார அனுஸ்டானங்கள்,ஆலய வழிபாடுகளையும் கைவிட்டுவிட்டு,பணமே கடவுள்,பணமே வாழ்க்கை என்று வாழ்வதுபோல் வாழாது தனது இறுதி மூச்சு வரை
  தன்னையும்,குடும்பத்தையும் வாட்டி வதைத்த வறுமைக்கும்,இறைவனின் மிக மிகக் கடினமான சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டபோதும், எதனையும் கவனத்திற்கொள்ளாது,மனம் தளராது,எந்தச் சந்தர்ப்பத்திலும் தனது இறைபக்தியை கைவிடாது வாழ் நாட்கள் அனைத்தையும் இறைபணிக்காக இறுதி மூச்சுவரை அர்ப்பணித்த இவரைப்போல் ஒரு சிவபக்தர் இனிப் பிறப்பரோ நமதூரில்?
  இவரைப்போல் கொடிய துன்ப துயரங்களை பல வழிகளிலும் அநுபவித்த யாரையும் நமதூரில் நான் பார்க்கவில்லை.வறுமையென்ன வறுமை?,குடும்பமென்ன குடும்பம்?,பணம் என்ன பணம்?இவற்றுக்கெல்லாம் மேலானவனே இறைவன்! இறைவனின் அருட்கடாட்சத்துக்கிடையில் இவையெல்லாம் ஒரு தூசு என வாழ்ந்தது மட்டுமன்றி,கொடிய துயர வாழ்க்கையிலும் தனது இறுதி மூச்சு வரை இறைபக்தியைக் கைவிடாத இவர் ஒரு மகத்தான இறைவனின் புதல்வன்.
  மாலை நேரமானதும் மக்கள் செல்லப் பயப்படும், மேலும் கொடிய யுத்தகாலத்தில் மக்களால் நினைத்தே பார்க்க முடியாதிருந்த சம்பில்துறைக்குள் துணிச்சலுடன் நுழைந்து சம்புநாதீஸ்வரரிடம் சரண்புகுந்து அவருடைய ஆலயத்தை யுத்தத்தாலோ,ஆக்கிரமிப்பாலோ அழிய விடாது கட்டிக்காத்த இவர் ஒரு தெய்வப் பிறவியாவார்.

  சம்புநாதீஸ்வரர் ஆலயத்தை இறுதி மூச்சுவரை கட்டிக் காத்த இம்மகானுக்கு சமாதியில் நினைவாலயம் அமைப்பதும், பணிப்புலம் சனசமூகநிலைய முன்றலில் நினைவுச்சிலை வைத்து காலமெல்லாம் இவரை நினைவுகூர வேண்டியதும் பணிப்புலத்து மக்களாகிய எமது கடமையாகும். இவரின் வாழ்க்கைச் சரித்திரத்தை நூல் வடிவில் வெளியிட இவருடைய வரலாற்றை முழுமையாக அறிந்த நமதூர் பெரியோர்கள் யாராவது எழுத முன்வரும் பட்சத்தில் அதற்கான உதவிகளை செய்யத் தயாராகவுள்ளேன்.

  ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்