Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்




தேவையான பொருட்கள் :

கத்திரிக்காய் – 6

கடுகு – 1/4 டீஸ்பூன்

சீரகம் – 1/4 டீஸ்பூன்

உளுந்து – 1/4 டீஸ்பூன்

கடலை பருப்பு – 1/4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மல்லித்தூள் – 2 டீஸ்பூன்

உப்பு –  தேவையனஅளவு

சின்ன வெங்காயம் – 50 கிராம்

தக்காளி – 1

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய் – 1 குழிக்கரண்டி

கரைச்ச புளி – 1/2 கப்

செய்முறை : கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிரட்டி தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும்.மசாலா தூள்கள் வாசம் போக கொதித்து, கத்திரிக்காய் வெந்ததும், புளி கரைசல் சேர்த்து கிளறி, ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கி விடவும்.இதில் தூள் வகைகள் சேர்க்கும் போது கொஞ்சம் தயிர் (2 டீஸ்பூன்) சேர்த்தால் வித்தியாசமான டேஸ்ட் கிடைக்கும். கத்தரிக்காய் கார குழம்பு ரெடி.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்