உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இறால் ஃப்ரைட் ரைஸ்

தேவையான பொருட்கள்

உதிரியாக வடித்த சோறு – 2 கப்

இறால் – 250 கிராம்

கேரட் – 3

பீன்ஸ் – 10

குடமிளகாய் – 1

வெங்காயத்தாள் – 5

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள் – சிறிது

செய்முறை

கேரட், பீன்ஸ், குடமிளகாய், வெங்காயத்தாளை நறுக்கி கொள்ளவும். இறாலை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஒரு தச்சியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடனதும், ஊற வைத்துள்ள இறாலை போட்டு, 7-8 நிமிடம் சூடக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதே தச்சியில் வெங்காயத் தாள் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய, பின் நறுக்கி வைத்துள்ள மீதமுள்ள காய்கறிகளைப் போட்டு நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும். பின் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கி, சூடக்கி வைத்துள்ள இறாலை சேர்த்து சிறிது நேரம் கிளறவும். கடைசியாக அதில் சாதத்தைப் போட்டுகிளறி இறக்கினால், சுவையான இறால் ஃப்ரைட் ரைஸ் ரெடி!

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்