உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வேளையில் குண்டுகள் வெடிக்கும் சத்தத்தினையடுத்து அப்பகுதி மக்கள் பெரிதும் பதற்றத்திற்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அண்மையில் குறித்த பகுதிகளில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பொதுமக்களின் காணிகள் பல விடுவிக்கப்பட்டிருந்தன.

குறித்த காணிகளைத் துப்பரவாக்கும் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டிருந்தபோது அக்காணிகளில் இருந்த வெடிபொருட்களே வெடித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நிலத்தில் புதைந்திருந்த குறித்த குண்டுகள் வெடித்துச் சிதறியுள்ளதையடுத்து அப்பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை நிலவியதுடன், குறித்த வெடிப்புச் சம்பவத்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்