உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஆயுதச் சோதனை பேச்சுவார்த்தைக்கு வட கொரியா ஒருபோதும் உடன்படாது’ என அந்த நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க சுதந்திர தினத்தன்று கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து இலக்கைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணையை பரிசோதனை செய்த வடகொரியா, உலகின் எந்த பகுதியையும் தாக்க தங்களால் முடியும் என்பதை உலகிற்கு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த ஏவுகணை சோதனைக்குப் பின்னர் பேசிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், இந்த ஏவுகணை சோதனை, அமெரிக்கர்களுக்குச் சுதந்திரதின பரிசு. வட கொரியா தனது துணிச்சலை அமெரிக்காவுக்குக் காட்டும். ஆயுதச் சோதனை குறித்த பேச்சுவார்த்தைக்கு ஒருபோதும் உடன்படாது என்றார்.

உலக நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்திவருகிறது. அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதனை வட கொரியா பொருட்படுத்தாமல் ஏவுகணை சோதனைகளை நடத்திவருகிறது.

இதற்குப் பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. இதனைடையே ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலை கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்