உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மெக்சிகோ சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் 28 கைதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சர்வதேச அளவில் போதை மருந்து விற்பனை செய்யும் கும்பல்களுக்கு சொர்க்கமாக திகழும் மெக்சிகோவின் கியூரெரோ மாநில காபுல்கோ நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையில், நேற்று (வியாழக்கிழமை) இந்த வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு வேறு பிரிவுகளாக பிரிந்து கைதிகள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் இதன்போது, துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மெக்சிகோவும் விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க உள்துறை செயலர் ஜோன் கெல்லி அந்நாட்டு ஜனாதிபதி பெனா நிட்டோவைச் சந்தித்து போதை மருந்து கும்பல்களால் ஏற்படும் குற்றங்களை குறைப்பது தொடர்பில் கலந்துரையாடியிருந்த நிலையில்; இந்த வன்முறை இடம்பெற்றுள்ளது.

1624 கைதிகளை உள்ளடக்கக் கூடியதாக அமைந்துள்ள இந்த சிறைச்சாலையில், சுமார் 2000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாகவே சில சிறிய பிரச்சினைகளும் பெரிதாக உருவெடுப்பது வழக்கம். எனினும் சிறை அதிகாரிகள் அதனை கண்டுகொள்வதில்லை.சட்டஒழுங்கு மிக மோசமாக அமைந்துள்ள குறித்த நகரானது போதை மருந்து கடத்தல் கும்பல்களின் இருப்பிடமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்