உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பூண்டு கொள்ளு குழம்பு

தேவையனபொருள்கள்

கொள்ளு – 3 டீஸ்பூன்,

பூண்டு  – 20 பற்கள்,

தனியா(மல்லி) – 1 டீஸ் பூன்,

காய்ந்த மிளகாய் – 7 அல்லது 8,

வெந்தயம் – 1 டீஸ்பூன்,

புளி – ஒரு எலுமிச்சைப்பழ அளவு,

பெரிய தக்காளி – 1

பெரிய வெங்காயம் – 1

நல்லெண்ணெய் – 6 டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,

உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை புளியை தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.அடுப்பில் வெறும் சட்டியில்கொள்ளை போட்டு வாசனை வரும்வரை சுடாக்கி தனியே வைக்கவும். பின்பு அதே சட்டியில்1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாய், பூண்டு 5 பற்கள் போட்டு சுடாக்கிகொள்ளவும். ஆறியதும் இத்துடன் சுடாக்கிய கொள்ளு சேர்த்து மிக்சியில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும். சட்டியில் 4 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, மீதியிருக்கும் பூண்டைப் போட்டு வதக்கவும். வெங்காயம், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பின் புளிக்கரைசல், அரைத்த மசாலா கலவை, உப்பு போட்டு கலந்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் இறக்கும் முன்பு 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை சுழற்றி ஊற்றி இறக்கவும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்