உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்காளான் பக்கோட

தேவையான பொருட்கள்

காளான் – 200 கிராம்

வெங்காயம் – 1

இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்

பெருங்காய்தூள் – சிறிதளவு

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

சீரகத் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

அரிசி மா – 2 டீஸ்பூன

கடலை மா – 5 டீஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

காளானை நன்றாக கழுவி நீளமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய், நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நீளமாக காளான், நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுத்து அதனுடன், அரிசி மா, கடலை மா, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும். அடுப்பில்சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த காளான் மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சூப்பரான காளான் பக்கோடா ரெடி!

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்