உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


துருக்கியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 200இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

6.7 ரிக்டர் அளவில் பதிவான குறித்த நிலநடுக்கமானது ஏஜியன் கடலில் சுமார் 11 கிலோமீற்றர் தூரத்தில், 10 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மிகத் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

இதுவரை இருவரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள அதேவேளை, காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துருக்கியிலும், கிரேக்கத்திலும் அடிக்கடி நிலநடுக்கம் உணரப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கடந்த 1999ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 17 ஆயிரம் பேர்வரை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்