Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ பீட மாணவர்களின் தலைவர் ரயன் ஜெயலத்தின் கடத்தல் முயற்சியை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணிப்பகிஷ்கரிப்பினால் தலைநகர் கொழும்பில் மாத்திரமின்றி வடக்கு, கிழக்கு, மலையகம் என நாடளாவிய ரீதியில் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

வடக்கில் பெரும்பாலான வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். நகரிலுள்ள வைத்தியசாலைகளிலும் வைத்தியர்கள் கடமையில் ஈடுபடாததால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதுடன், தூர இடங்களில் இருந்து வந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

திருகோணமலையில் ‘இலங்கை மருத்துவ சபையின் சுயாதீன தன்மை ஆபத்தில்’ என்ற கோஷத்தினை முன்வைத்து திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வைத்தியர்களின் பணிப் புறக்கணிப்பின் காரணமாக இன்றையதினம் வெளிநோயாளர் பிரிவு இயங்காததனால், பொதுமக்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகினர்.

மலையகத்தில் சில வைத்தியசாலைகளில் சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர். இதனால் அங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் வெளிநோயாளர் பிரிவு முழுமையாக செயழிழந்ததனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

நுவரெலியா, ஹற்றன், டிக்கோயா, லிந்துலை, கொட்டகலை, டயகம, அக்கரப்பத்தனை போன்ற வைத்தியசாலைகளில் இவ்வாறான ஒரு நிலைமையை காணக்கூடியதாக இருப்பதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் புத்தளம் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளதாக புத்தளம் செய்தியாளர் குறிப்பிட்டார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்