உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


குற்றச் செயல்கள் இடம்பெறும்போது பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது அவசியம் என வட.மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் குறித்து பொலிஸ் மா அதிபர் தெரிவித்த கருத்துத் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”குற்றச் செயல்கள் எங்கு நடைபெற்றாலும் எமது எல்லா வளங்களையும் உள்ளேற்று அவற்றைத் தடுக்கவோ உரிய விதத்தில் நடவடிக்கை எடுக்கவோ வேண்டும்.எனவே இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் ஒருவர் எது நடந்தாலும் அவர்களுடைய ஒத்துழைப்பைக் கோரக்கூடாது என்று அதற்கு அர்த்தமில்லை.

வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றத்தை நான் இப்பொழுதும் கோருகின்றேன். ஆனால் குற்றங்கள் நடைபெறும் பொழுது அவற்றைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது சட்டம், ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சரின் கடமையாகும்.

இராணுவத்தை அவசரத்திற்கும் அழைக்கக்கூடாது அவர்கள் களமிறக்கப்படுவதை எதிர்க்கவேண்டும் என கேட்பவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமானவர்களாகவே இருப்பர்” என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்