உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு சென்ற விமானத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி தெல்தெனியா பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய அப்துல் வாகித் அபூபக்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வேலைவாய்ப்பிற்காக விமானமூலம் சவுதி அரேபியா ஜித்தாவிற்கு யூ எல் 282 விமானத்தில் பயணித்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் விமானத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு உயிரிழந்தவரின் சடலம் விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்