உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அமெரிக்காவில் சீனா மேற்கொண்டுவரும் முதலீடுகளை தடை செய்ய வேண்டும் அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வலியுறுத்தியுள்ளார்.

வடகொரியாவின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக செயற்படும் சீனாவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க செனட் சபை உறுப்பினரும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவருமான சக் ஷுமர் ட்ரம்பிற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) எழுதிய கடிதத்திலேயே இவ்விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”தென்கொரியா மற்றும் ஜப்பான் எல்லை பகுதியில் வடகொரியா தடைகளை மீறி தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்திவருகிறது. இதற்கு சீனத உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆனால் சீனா நினைத்தால் வடகொரியாவின் அணுஆயுத சோதனைகளை உடனடியாக தடுக்கமுடியும். ஆனால், சீனா அதனை செய்யாது வேடிக்கை பார்த்து வருகிறது.

இந்நிலையில், வடகொரியாவின் செயற்பாட்டில் சீனாவின் தலையீட்டை அதிகரிக்க செய்ய சீனா மீது கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்காக அமெரிக்காவில் சீனா செய்துவரும் முதலீடுகளுக்கு உடனடியாக தடை விதிக்கவேண்டும். இது தொடர்பாக அமெரிக்காவின் வெளிநாட்டு முதலீட்டு குழு மூலம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்