உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெருநகரான ஹெறாத்தில் உள்ள ஷியா மசூதியொன்றில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் சுமார் 30 பேர் உயிரிழந்ததுடன், 60இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நேர தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இரு தாக்குதல்தாரிகள் இணைந்து நேற்றைய தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஒருவர் தற்கொலை குண்டுதாரி எனவும் மற்றையவர் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தாக்குதலில் 29 பேர் உயிரிழந்ததுடன், 64 பேர்வரை படுகாயமடைந்த நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானில் இவ்வாண்டில் மாத்திரம் சுமார் ஆயிரத்து 700இற்கும் அதிகமான பொதுமக்கள் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

நேற்று தாக்குதல் இடம்பெற்ற ஹெறாத் நகரானது, ஈரானை அண்மித்த பகுதியிலுள்ள ஆப்கானிஸ்தானின் அமைதியான நகரங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்