உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


//people.panipulam.net/#!album-710

One Response to “சாந்தை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய 09 ஆம் நாள் வேட்டைத் திருவிழா 04,08 2017 பதிவுகள்”

 • kunaththilakam saanthai:

  தேரேறி வருக்கின்றான் !
  ———————————-

  சக்தியின் மூத்த மைந்தன்
  சாந்தை விநாயகன் இன்று
  சித்திரத் தேர் ஏறி
  வீதி உலா வருகிறான் !

  மும்மல மழித்து அடியார்க்கு
  முத்தி நெறி அளிக்க இன்று
  நிர்மலன் சாந்தை ஊரான் 8
  தேரேறி வருகிறான் !

  பக்தியுடன் பரவி அடியார் புடை சூழ
  சித்தி விநாயகன் இன்று தேரேறி வருகிறான் !
  எத்திசையும் அருள் சுரந்து ஏற்றம் அளித்திட
  சித்தி புத்தி நாதன் இன்று தேரேறி வருகிறான் !

  அரக்கர் குணம் களைந்து
  இரக்க மனம் அளிக்க ஐந்து
  கரத்தவன் விநாயகன் இன்று
  உரத்த உளம் கொண்டு தேரில் வருகிறான் !

  விண்ணவர் மலர் சொரிய
  மண்ணவர் வணங்கி நிற்க
  எண்ணங்கள் ஈடேற இன்று
  பண்ணவன் தேரில் வருகிறான் !

  ஆ த.குணத்திலகம்
  சாந்தை .

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்