உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஸ்கொட்லாந்தில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய புவியியல் ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.நேற்று (வெள்ளிக்கிழமை) 3.8 ரிக்டர் அளவில் பதியப்பட்ட நிலநடுக்கம்,  மாலை 3.45 மணியளவில் ஏற்பட்டதாகவும்  அது  மொய்டார்ட் பகுதியில் மையம் கொண்டிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே போல் கின்கியூசீ எனும் பகுதியில் 1.5 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் குறித்த புவியியல் ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது.ஸ்கொட்லாந்தில் கடந்த 1986 ஆம் அண்டிற்கு பிறகே இதுபோன்ற நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிலநடுக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த புவியியல் ஆய்வு மையம், “ஸ்கொட்லாந்தின் மேற்குப் பகுதியிலேயே இந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. 1931 ஆம் ஆண்டில் சுமார் 6.1 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் பிரித்தானியாவில் உணரப்பட்டது. அதற்கு முன்னதாக அதாவது 1880 ஆண்டில் 5.1 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் ஸ்கொட்லாந்திலும் உணரப்பட்டது” என தெரிவித்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்