உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வடக்கில் தற்போதைய இளைய தலைமுறையினரின் செயற்பாடுகள் வேதனையளிப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டி பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு இளைஞர்களின் சீரழிவிற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற பண உதவிகள் முறையற்ற விதத்தில் செலவு செய்யப்படுவதே பிரதான காரணமாக அமைந்துள்ளது.

கடந்த காலங்களில் வடக்கில் மாணவர்கள் கல்வி மட்டத்தில் உன்னத நிலையை எட்டியிருந்தனர். ஆனால் தற்போது அந்தச் சூழல் இல்லை. எனினும் மீண்டும் எமது மாணவர்கள் சிறந்த கல்வி அடைவு மட்டத்தினை அடைந்து கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்” என முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்