உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

37 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்றிரவு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினரால் குறித்த நபா் கைது செய்யப்பட்டு விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாங்கொக்கில் இருந்து இலங்கைக்கு நேற்றிரவு 12 மணிக்கு விமானத்தில் வந்த பாகிஸ்தான் பிரஜை மிக நுட்பமான முறையில் போதைப் பொருளினை மறைத்து வைத்துக் கொண்டு வரப்பட்ட நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது குறித்த மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்