உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


லண்டனில் சரக்கு ரயிலுடன், பயணிகள் ரயில் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.லண்டன், வாட்டர்லூ ரயில் நிலையத்திலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும், பல சேதங்கள் ஏற்பட்டுள்ளதால், பெரிய மேம்படுத்தல் வேலை நடைபெற்று வருகிறது. இதனால், பல நடைமேடைகள் மூடப்பட்டுள்ளது. வாக்ஸ்ஹால் மற்றும் வாட்டர்லூ இடையே சிக்னல்கள் செயலிழந்துள்ளது.

சம்பவயிடத்தில் பொலிசார், தீயணைப்பு துறையினர் மற்றும் பொறியாளர்கள் குவிந்துள்ளனர். விபத்து காரணமாக சில சேவைகள் ரத்து செய்யப்பட்டு முன்கூட்டியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வாட்டர்லூ இரயில் நிலையத்தை தினமும் பயன்படுத்தும் மக்கள் இன்று தவிர்க்க வேண்டும் என தென் மேற்கு ரயில்வே வலியுறுத்தியுள்ளது.

மேலும்,லண்டனில் உள்ள அனைத்து போக்குவரத்து சேவைகளிலும் ரயில் டிக்கெட் ஏற்றுக் கொள்ளப்படும் என தென் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்