உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சியரா லியோன் நாட்டில் பெய்து வரும் கனமழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 312 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியரா லியோனில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இக்கனமழையை தொடர்ந்து தலைநகரான ஃபிரீடவுனுக்கு அருகில் உள்ள Regent பகுதியில் நேற்று அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன. மக்கள் தூங்கிய நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலரும் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள தகவலில் இதுவரை 312 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.மேலும், உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.நிலச்சரிவு ஏற்பட்டதும் மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்னதாக உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் விரைவாக ஈடுப்பட்டு பலரை காப்பாற்றியுள்ளனர்.

சியரா லியோன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவை சேர்ந்த அதிகாரியான கேண்டி ரோஜர் வெளியிட்ட அறிக்கையில், ‘நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் புதைந்துள்ளதால் தற்போது 2000 பேர் வரை வீடுகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

மீட்புப் பணி விரைவாக நடைபெற்று வருவதாகவும், பெரும் சேதத்தை தவிர்க்க அனைத்து தன்னார்வ அமைப்புகளும் உதவ முன்வர வேண்டும் என கேண்டி ரோஜர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்