டிரம்ஸ்டிக்ஸ் புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’. இதில் ‘பசங்க’ பாண்டி, தமிழ் என்ற பெயரில் புதுமுக கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக கயல் ஆனந்தி நடிக்கிறார்.
இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பாலசரவணன், லிவிங்ஸ்டன், ரேகா, சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், தளபதி தினேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – சுக செல்வன், இசை – இஷான்தேவ், கலை – என்.கே. பாலமுருகன், எடிட்டிங் – மணி டி, நடனம் -பாலகுமார், ரேவதி, தினா, ஸ்டண்ட் – ஜி.என். முருகன், தயாரிப்பு – வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், இவர் தயாரிக்கும் முதல் படம் இது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஜெகன்நாத். “நாயகி, தொலைத்த ஒரு ஜோடி செருப்புகளை சுற்றி நடக்கும் கதை.ஒரு அடைமழை மாதத்தில் தொலைந்த அந்த செருப்புகளை தேடி குடையுடன் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான் நாயகன்.
இறுதியில் செருப்பைக் கண்டு பிடிக்கும் நாயகனின் முயற்சி வெற்றி பெற்றதா? தொலைந்த ஜோடி செருப்புகள் நாயகியை சென்றடைந்ததா? இருவரையும் அவை ஒன்று சேர்த்ததா? என்பதுதான் ‘படத்தின் மிகுதி கதை.