உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்பொதுபல சேனவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக ஹோமாகம நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்கவினால் இந்த பிடியாணை உத்தரவு நேற்றைய தினம் பிறப்பிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையொன்று நடந்துகொண்டிருந்த போது பொலிஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தலை மீறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, நீதிமன்றத்திற்குள் நுழைந்து தகாத வார்த்தைகளைப் பேசி மன்றிற்கு அகௌரவப்படுத்திய குற்றச்சாட்டில் ஞானசார தேரர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்றைய தினம் ஹோமாகம நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போது சந்தேக நபராக ஞானசார தேரர் மன்றிற்கு சமூகமளித்திருக்கவில்லை.இந்நிலையில் அவர் வெளிநாட்டிற்கு சென்றிருப்பதாக மன்றில் தெரியப்படுத்தப்பட்டது.

இதனை கவனத்திற்கொண்ட நீதிமன்றம், வெளிநாடு செல்லும்போது நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தாமை மற்றும் வழக்கு விசாரணையில் மன்றில் முன்னிலையாகாமை ஆகியவற்றை மையப்படுத்தி ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை உத்தரவை பிறப்பித்தது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்