உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்2017ஆம் ஆண்டிற்கான வருடாந்த கொழும்பு பாதுகாப்பு மாநாடு திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.இதில் 91இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு இராணுவ மற்றும் சிவில் அமைப்புக்களை சேர்ந்த புத்திஜீவிகள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய சுமார் 800 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாநாட்டில் பங்குகொள்வதற்காக 22 இந்திய பாதுகாப்பு ஆலோசகர்கள், இலங்கையின் 10 பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் வெளிநாட்டின் 2 இராணுவ தூதுக்குழுவினர் ஏற்கனவே கையொப்பமிட்டுள்ளனர்.இம் மாநாடானது, 2011ஆம் ஆண்டு தொடக்கம் தேசிய, பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடப்படும் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இவ்வருட பாதுகாப்பு மாநாட்டின் அமர்வுகளில் ‘வன்முறை தீவிரவாதம்’, ‘வன்முறை தீவிரவாதத்தை முறியடித்தல்’, ‘வன்முறை தீவிரவாதத்தை முறியடித்தலில் படைவீரர்களின் வகிபாகம் மற்றும் வன்முறை தீவிரவாத முறியடிப்பு பொறிமுறைகள் உள்ளிட்ட பல தலைப்புக்களில் விரிவுரைகள் இடம்பெறவுள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்