Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



முறைகேடு வழக்கில் சிக்கிய முன்னாள் தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா சிறை தண்டனையிலிருந்து தப்பிக்க நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார் என்று கூறப்படுகிறது. யிங்லக் ஷினவத்ரா தாய்லாந்தின் பிரதமராக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2014 வரை பதவி வகித்தார்.

அவரது ஆட்சிக் காலத்தில் அரிசி உற்பத்தியைப் பெருக்க அளிக்கப்பட்ட மானியத் திட்டம் பெரும்பான்மை மக்களின் வரவேற்பைப் பெற்றது. ஆனால் நெடுங்காலமாக தாய்லாந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த ராணுவத்தின் தூண்டுதலால் யிங்லக் ஷினவத்ரா மீது ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்நாட்டு ராணுவம் அவருடைய ஆட்சியைக் கவிழ்த்தது.

ஊழல் வழக்கு விசாரணை தாய்லாந்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை அதன் மீதான தீர்ப்பு வெளியாக இருந்தது. அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் நீதிமன்ற வளாகம் அருகே குவிந்திருந்தனர்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் யிங்லக் ஷினவத்ரா உச்ச நீதிமன்றத்துக்கு வரவில்லை. அவர் நாட்டைவிட்டு வெளியேறியிருக்கலாம் என்று கூறப்பட்டது. யிங்லக் நீதிமன்றத்துக்கு வராததது அவரது கட்சியினருக்கும் ஆதரவாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

தாய்லாந்தில் செய்தியாளர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை ராணுவம் விதித்துள்ளது. எனவே தகவல்களை அறிந்து கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில், அவர் நாட்டைவிட்டுத் தப்பியோடியதாக ராணுவ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இது குறித்து ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தது: யிங்லக் ஷினவத்ரா நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார். தனியார் விமானம் மூலம் அவர் முதலில் சிங்கப்பூர் சென்றதாகத் தெரிகிறது. அதன் பின்னர் அவர் துபை சென்றார். ஆனால் துபையில் தங்குவது அவரது நோக்கமாக இருக்க வாய்ப்பில்லை. அவர் பிரிட்டன் செல்ல வாய்ப்பிருக்கிறது. பிரிட்டனில் அவர் அரசியல் புகலிடம் கோரலாம்.

அவருடைய சகோதரரான முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு லண்டனில் வீடு உள்ளது என்று தாய்லாந்து ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் கடந்த புதன்கிழமையே நாட்டைவிட்டு வெளியேறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

யிங்லக்கின் மூத்த சகோதரர் தக்சின் ஷினவத்ரா தாய்லாந்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெருமைக்கு உரியவர். கடந்த 2001}ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்த அவருடைய ஆட்சியையும் ராணுவம் 2006}இல் கவிழ்த்தது. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் நாட்டைவிட்டு வெளியேறினார். தக்சின் ஷிவத்ரா ஆஜராகாமல் நடைபெற்ற வழக்கின் முடிவில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தக்சினைத் தொடர்ந்து அவரது இளைய சகோதரி அரசியலில் குதித்துஇ 2011}ஆம் தேர்தலில் வெற்றி பெற்றுப் பிரதமரானார்.

அவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. யிங்லக் ஷினவத்ராவை தாய்லாந்து அரசியலிலிருந்து வெளியேற்றுவதற்காக ராணுவ ஆட்சியாளர்களின் முழு ஒத்துழைப்புடன் அவர் நாட்டைவிட்டு வெளியேறும் திட்டம் நடந்தேறியது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். தனது தங்கை ஒரு நாள் கூட சிறைவாசம் அனுபவிக்கக் கூடாது என்று தக்சின் திட்டமிட்டு இதை நிறைவேற்றினார் என்றும் கூறப்படுகிறது. யிங்லக் முதலில் சாலை வழியாக கம்போடியா சென்று அங்கிருந்து சிங்கப்பூருக்கு தனியார் விமானத்தில் பறந்து சென்றார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்