உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு இணைய பாதுகாப்பு விவகாரங்களில் ஆலோசனை அளித்து வந்த குழுவைச் சேர்ந்த 7 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இணைய விஞ்ஞானி டி.ஜெ.பட்டீலும் அடங்குவார்.

7 பேரும் கூட்டாக எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், தேச பாதுகாப்பு விவகாரங்களில் டொனால்டு டிரம்ப் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ளனர். இணைய பாதுகாப்புக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல் குறித்து போதிய அக்கறை செலுத்தவில்லை என்றும், இனவெறி குழுக்களின் வன்முறையை கண்டிக்கவில்லை என்றும் டிரம்ப் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்