உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றில் மதிய சாப்பாட்டிற்குள் புழு இருந்தமையால் அது தொடர்பில் சாப்பிட சென்றவர் விளக்கம் கேட்டதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த உணவகத்தில் மதிய சாப்பாட்டை சாப்பிடுவதற்காக சென்ற நபர் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களால் அடித்து உதைத்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

தனக்கு வைக்கப்பட்ட சாப்பாட்டுக்குள் 2உஅ நீளமான புழு இருந்ததை அவதானித்த ஒருவர் அது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் சுட்டிக்காட்டி வினவியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளரும் ஊழியர்களுமாக சேர்ந்து குறித்த நபரை கடையிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றியதோடு ஹெல்மற் மற்றும் கொட்டான் தடிகளாலும் தாக்கியுள்ளனர்.

குறித்த கடையில் அடிக்கடி இவ்வாறு சுகாதார சீர்கேடுகள் நடைபெறுகின்றதெனவும் இது குறித்து யாழ் சுகாதார பணிப்பாளரோ அவரது பணியாளர்களோ எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுப்பதில்லையெனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவம் யாழ் நகரப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்